top of page

கம்பு சண்டையின் விதிமுறைகள்

போட்டிகளம் (Tournament Ring)

  • சிலம்பம் போட்டிக்கான களம் வட்டம் வடிவில் இருக்கும். அதில் இரண்டு வட்டம் போடப்பட்டிருக்கும்

  • முதல் வட்டத்தின் சுற்றளவு 20 அடி, இரண்டாம் வட்டத்தின் சுற்றளவு 22 அடி

  • போட்டியாளர் முதல் வட்டத்திற்கு உள்ளே மட்டும் சிலம்பம் செய்து காட்ட வேண்டும்.

  • இரண்டாம் வட்டத்தை விட்டு போட்டியாளரின் ஒருகால் மட்டும் வெளியே சென்றால்

  • முதல் தடவை எச்சரிக்கை வழங்கப்படும்,

  • இரண்டாம் தடவை வெளியே சென்றால் ஒரு மதிப்பெண் குறைக்கப்படும்,

  • மூன்றாம் தடவை வெளியே சென்றால் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள்.

  • இரண்டு கால் முதல் தடவையே வட்டத்தை விட்டு வெளியே சென்றாள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள்

Points.png
  • படத்தில் பச்சை வண்ணம் கொடுக்கப்பட்டுள்ள இடங்களுக்கெல்லாம் 1 - மதிப்பெண் வழங்கப்படும், போட்டியாளரின் முதுகில் சிலம்பம் கம்பால் தொட்டால் மட்டுமே 2 - மதிப்பெண்கள் வழங்கப்படும்.

  • படத்தில் நீல நிறம் கொடுக்கப்பட்டுள்ள இடங்களுக்கு எல்லாம் கம்பால் தொட்டால் மதிப்பெண் கிடையாது.

  • போட்டியாளரின் தலை மற்றும் பிறப்புறுப்புகளில் அடிபட்டால் முதல் எச்சரிக்கை வழங்கப்படும். அதில் பலமாக அடிபட்டால் அடித்த போட்டியாளர் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள்.

போட்டியாளர்கள் செய்ய வேண்டியது

  • போட்டியில் பாவலா செய்து கொண்டே மதிப்பெண்கள் எடுக்க வேண்டும்.

  • நேர்பிடி மற்றும் எதிர்பிடி இரண்டையும் பயன்படுத்தி விளையாடலாம்.

  • போட்டி நடக்கும் பொழுதே பிடி முறைகளை மாற்றம் செய்து கொள்ளலாம்.

பாவலா செய்யும் முறை

  • போட்டியாளரின் கழுத்து மற்றும் இடுப்பு வரை மட்டுமே கம்பை சுற்ற வேண்டும்.

  • பாவலா வலது, இடது மற்றும் 8 வடிவில் செய்யலாம்.

போட்டியாளர்கள் செய்யக்கூடாது

  • பாவலா செய்யாமல் தொடர்ச்சியாக போட்டியாளரை அடித்துக் கொண்டே இருந்தால் மதிப்பெண் கிடையாது.

  • ஒரு கையால் போட்டியாளரை அடித்தால் மதிப்பெண் கிடையாது.

  • கம்பால் போட்டியாளரை குத்தினாலும் மதிப்பெண் கிடையாது.

  • போட்டியாளரை பலமாக அடித்து விடக்கூடாது.

  • கம்பை சுற்றுதல் மற்றும் வீச்சு முறைகளும் செய்யக்கூடாது.

  • கம்பை முகத்திற்கு நேராக நீட்ட கூடாது

  • போட்டியாளர் எந்த வித போதை பொருள்களும் மற்றும் ஊக்க பொருட்களும் பயன்படுத்த அனுமதி கிடையாது அவ்வாறு செய்தால் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள்

  • போட்டியாளர் கம்பை தவற விட்டால் அதிக மதிப்பெண்கள் எடுத்து இருந்தாலும் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள். 

bottom of page