top of page

போட்டி விதி முறைகள்

போட்டிகளம் (Tournament Ring)

  • சிலம்பம் போட்டிக்கான களம் வட்டம் வடிவில் இருக்கும். அதில் இரண்டு வட்டம் போடப்பட்டிருக்கும்

  • முதல் வட்டத்தின் சுற்றளவு 20 அடி, இரண்டாம் வட்டத்தின் சுற்றளவு 22 அடி

  • போட்டியாளர் முதல் வட்டத்திற்கு உள்ளே மட்டும் சிலம்பம் செய்து காட்ட வேண்டும்.

  • இரண்டாம் வட்டத்தை விட்டு போட்டியாளரின் ஒருகால் மட்டும் வெளியே சென்றால்

  • முதல் தடவை எச்சரிக்கை வழங்கப்படும்,

  • இரண்டாம் தடவை வெளியே சென்றால் ஒரு மதிப்பெண் குறைக்கப்படும்,

  • மூன்றாம் தடவை வெளியே சென்றால் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள்.

  • இரண்டு கால் முதல் தடவையே வட்டத்தை விட்டு வெளியே சென்றாள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள்

சிலம்பம் பாடமுறை (Silambam Training Method)

சிலம்பம் என்பது உடல், மனம் மற்றும் ஆயுத ஒருங்கிணைப்பை அடிப்படையாகக் கொண்ட பாரம்பரிய போர்க்கலை ஆகும். சிலம்பப் பயிற்சியில் உடல் அசைவுகளுடன் ஆயுதச் சுற்று முறைக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.

ஆயுதச் சுற்று முறை

சிலம்பத்தில் உள்ள ஆயுதங்களை பயன்படுத்தி பாடம் செய்யும்போது,
நமது உடல் அசைவுகளை விட ஆயுதத்தின் சுற்று முறை இரண்டு மடங்கு வேகமாக இருக்க வேண்டும்.

உதாரணம்:

நமது காலடி வரிசையில் ஒரு அடி எடுத்து வைக்கும் முன்பே,
சிலம்பக் கம்பு இரண்டு முறை முழுமையாக சுற்றி முடிந்திருக்க வேண்டும்.

உடல் அசைவு விதிமுறை

சிலம்பம் பாடம் செய்யும் போது, மூன்று வினாடிகளுக்குள் உடலில் தொடர்ச்சியான அசைவுகள் இருக்க வேண்டும். உடல் அசைவுகள் நிறுத்தப்படாமல், சீரான வேகத்துடன் பயிற்சி மேற்கொள்ளப்பட வேண்டும்.

உடல் குறைபாடு உள்ளவர்களுக்கான சிலம்பப் பயிற்சி

சிலம்பப் பயிற்சி உடல் குறைபாடு உள்ளவர்களுக்கும் ஏற்ற வகையில் மாற்றி அமைக்கலாம்.

  • கை அல்லது காலில் குறைபாடு உள்ளவர்கள் → விரல்களுக்கு இடையில் வைத்து சிலம்பக் கம்பை சுற்றலாம்.

  • நடக்க முடியாதவர்கள் → அமர்ந்த நிலையிலேயே சிலம்பம் சுற்றி பயிற்சி செய்யலாம்.

  • உடல் நிலைக்கு ஏற்ற வகையில் → பயிற்சி முறைகள் எளிமைப்படுத்தி நினைவாற்றல் மற்றும் கை ஒருங்கிணைப்புக்கு முக்கியத்துவம் அளிக்கலாம்.

பயிற்சியின் நோக்கம்

  • உடல் ஒருங்கிணைப்பு

  • கவனம் மற்றும் சுய கட்டுப்பாடு

  • பாரம்பரிய போர்க்கலை பாதுகாப்பு

  • அனைவரையும் உள்ளடக்கும் பயிற்சி முறை (Inclusive Training)

தனி திறமை பிரிவுகள்

  1. கடைக்கம்பு வீச்சு (ம) சுற்று

  2. நடுக்கம்பு சுற்று

  3. வேல் கம்பு வீச்சு

  4. இரட்டைக் கம்பு வீச்சு மற்றும் சுற்று

  5. ஒற்றை வாள் வீச்சு

  6. இரட்டை வாள் வீச்சு

  7. ஒற்றை சுருள்வாள் வீச்சு

  8. இரட்டை சுருள்வாள் வீச்சு

  9. மான் கொம்பு ஆட்டம்

  10. அருவாள் வீச்சு

  11. புலி நகம் ஆட்டம்

  12. நிராயுதபாணி வரிசை

img4_edited.jpg

கடைக்கம்பு வீச்சு (ம) சுற்று​

பாடம் முறைகளில் குறிப்பாக இருக்க வேண்டியது

  • சுற்றுகளின் வகைகள்

  • வீச்சு, அடி, இடி, குத்து முறைகள்

  • பாவலா

  • நிலைகள்

  • பாவனை

  • திசை பிரிதல்

img4_edited.jpg

நடுக்கம்பு சுற்று

கம்பு சுற்றும் முறைகளில் குறிப்பாக இருக்க வேண்டியது

  • சுற்றுகளின் வகைகள்

  • நளினம்

  • பாவனை

  • திசை பிரிதல்

maankombu kathiravan.jpg

மான் கொம்பு ஆட்டம்

பாடம் முறைகளில் குறிப்பாக இருக்க வேண்டியது

  • சுற்றுகளின் வகைகள்

  • பாவலா

  • நிலைகள்

  • பாவனை

  • திசை பிரிதல்

Stick Fight.jpg

கம்பு சண்டையின் விதிமுறைகள்

சண்டை முறையில் குறிப்பாக இருக்க வேண்டியது

  • பாவலா

  • நிலைகள்

  • பாவனை

Pulinagam_edited.jpg

புலி நகம் ஆட்டம்

சண்டை முறையில் குறிப்பாக இருக்க வேண்டியது

  • பாவலா

  • நிலைகள்

  • பாவனை

bottom of page