போட்டி விதி முறைகள்
போட்டிகளம் (Tournament Ring)
-
சிலம்பம் போட்டிக்கான களம் வட்டம் வடிவில் இருக்கும். அதில் இரண்டு வட்டம் போடப்பட்டிருக்கும்
-
முதல் வட்டத்தின் சுற்றளவு 20 அடி, இரண்டாம் வட்டத்தின் சுற்றளவு 22 அடி
-
போட்டியாளர் முதல் வட்டத்திற்கு உள்ளே மட்டும் சிலம்பம் செய்து காட்ட வேண்டும்.
-
இரண்டாம் வட்டத்தை விட்டு போட்டியாளரின் ஒருகால் மட்டும் வெளியே சென்றால்
-
முதல் தடவை எச்சரிக்கை வழங்கப்படும்,
-
இரண்டாம் தடவை வெளியே சென்றால் ஒரு மதிப்பெண் குறைக்கப்படும்,
-
மூன்றாம் தடவை வெளியே சென்றால் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள்.
-
இரண்டு கால் முதல் தடவையே வட்டத்தை விட்டு வெளியே சென்றாள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள்
தனி திறமை பிரிவுகள்
-
நெடுங்கம்பு வீச்சு (ம) சுற்று
-
நடுக்கம்பு சுற்று
-
வேல் கம்பு வீச்சு
-
இரட்டைக் கம்பு வீச்சு மற்றும் சுற்று
-
ஒற்றை வாள் வீச்சு
-
இரட்டை வாள் வீச்சு
-
ஒற்றை சுருள்வாள் வீச்சு
-
இரட்டை சுருள்வாள் வீச்சு
-
மான் கொம்பு ஆட்டம்
-
அருவாள் வீச்சு
-
புலி நகம் ஆட்டம்
-
நிராயுதபாணி வரிசை